Wednesday 5 October 2016

சுவையான மொறுமொறு காராச்சேவு....


காராச்சேவு என்றவுடன் நமக்கு உடனடியாக மனதுக்கு தோன்றுகிற பெயர் விருதுநகர் நகர் மாவட்டத்தை சேர்ந்த சாத்தூர்.

அப்படி என்ன ருசி அந்த ஊர் காராச்சேவுக்கு மட்டும் என எல்லாருக்கும் தோன்றும்.

காரணம் ஒன்று தான்
"பக்குவம்"
அந்த பக்குவத்தில் நாமும் வீட்டிலேயே செய்து ஜமாய்க்கலாம்.

தேவையான பொருள்கள்
கடலை மாவு
அரிசி மாவு
மிளகாய் பொடி (அ)மிளகுப்பொடி
சீரகம்
பூண்டு
உப்பு
தண்ணீர்

சரி வாங்க எப்புடி செய்யலாம்னு பார்க்கலாம்...

முதலில் பூண்டு மற்றும் சீரகம் இரண்டையும் மிக்ஸியில் போட்டு வெறுமனே அரைத்துவிட்டு, அப்புறம் சிறிது தண்ணீர் விட்டு பசை பதத்துக்கு அரைத்து எடுத்துவச்சுக்கோங்க...

அடுத்த வேலையா நயமான கடலை மாவு ,அரிசி மாவு ,மிளகாய் பொடி அல்லது மிளகுப்பொடி ,கொஞ்சம் உப்பு அப்புறம் தண்ணீர் சேர்த்து பிசைந்து வச்சுக்கோங்க.

ரொம்பவும் தண்ணியாகவோ அல்லது கெட்டியாகவோ இருக்காம பார்த்துக்கொள்ளுங்க.

அப்புறம்,
ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பூண்டு சீரக பசையை மேற்கூறிய பிசைந்து வைத்துள்ள மாவு கலவையுடன்
சேர்த்து ஒண்ணா பிசைந்து முறுக்கு
உரலில் வைத்து
சூடான எண்ணெயில் பிழிந்து
பொரித்து எடுத்தால் கமகம மொறுமொறு சுவையான காராச்சேவு தயார்.


அப்புறம் என்னங்க... நீங்களும் இதுபோல் செய்து வீட்டில் உள்ளவங்களை அசத்துங்க..
சரியா....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment