Saturday 22 October 2016

இவரைத் தெரியுமா....?-3


தென் ஆப்பிரிக்காவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 1960 செப்டம்பர் 13-ல்
ஜோகானஸ்பேர்க்கில் பிறந்தவர்.

இளம் வயதில் தென் ஆப்பிரிக்காவில் நிறப்பாகுபாடு அரசியல் மேலோங்கியிருந்தது. இந்த பாகுபாட்டை இவர் வெறுப்பவராக இருந்தார்.

பள்ளிப்படிப்பை முடித்த பின்பு மருந்தாளுநர் ஆகும் பொருட்டு மருந்தாளுமையியல் படித்தார்.
ஆனால் அப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார்.

அதன் பின்னர் இராணுவ சேவைக்கு ஆட்படுத்தப்பட்ட இவர் தொழில்முறை வான்படையில் இணைந்தார்.

உணவு விடுதியில் கறுப்பினத்தைச் சேர்ந்த உணவு பரிமாறுபவர் ஒருவர் கொடுமையான முறையில் இராணுவ வீரர்களால் நடத்தப்படுவதைக் கண்டு அவருக்காகப் பரிந்து பேச அதனால் மற்ற இராணுவ வீரர்களால் இவர் மோசமாக தாக்கப்பட்டார்.

டேவிட் என்ற புதிய பெயரில்
வானொலி வர்ணணையாளராக
புதுவாழ்வைத் துவக்கினார்.
ஆனால் எதிர்பார்த்ததை விட
மிகக் கடினமாக இருந்ததால் மனத்தளர்ச்சியுற்று தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.

இறுதியாக உலகம் போற்றிய மற்றும் தூற்றிய ஒரு புகைப்படப் பத்திரிக்கையாளராக மாறினார்.

போரினால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டின் பட்டினி கோரத்தை தன் புகைப்படம் மூலம் வெளிக்கொணர்ந்து
இவ்வுலகையே அதிரவைத்த இளைஞன்...


முதன்முறையாக  necklacing எனப்படும் கொடியதொரு கொலைமுறையை
பத்திரிக்கையில் புகைப்படமாக வெளியிட்டவர்.

1994 ஜூலை 27-ல் புலிட்சர் பரிசு பெற்ற தென்ஆப்பிரிக்க இளம்
புகைப்படப்பத்திரிக்கையாளர்.

மனத்தளர்ச்சி காரணமாக 1994 ஆம் ஆண்டு ஜீலை 27 ஆம் நாள் மோட்டார் புகைபோக்கி செயல்முறையைப் பயன்படுத்தி கார்பன் மோனாக்சைடு
விஷவாயுவால் தன் 33 வது வயதில் வாழ்வை முடித்துக் கொண்டார்.

யாரென்று தெரியலையா.....?
இவர் தான்
கெவின் கார்ட்டர்.

அவரால் பதிவு செய்யப்பட்ட
உலகை உருக்கிய அவரது
புகைப்படம் மற்றும் அதனால் அவர் சந்தித்த விமர்சனத்தையும்
கீழே பாருங்கள்.....


போரினால் பாதிக்கப்பட்ட சூடான்
நாட்டில் 1993 ஆம் ஆண்டில் கார்ட்டர் ஒரு காட்சியைக் கண்டு நிற்கிறார்.

உணவு வழங்கும் இடத்தை நோக்கி மெல்லிய முனகலுடன் உடல் நலிந்த பெண் குழந்தையொன்று வழியில் போராடிக் கொண்டிருந்தது.

மேலும் நடக்க வலுவில்லாமல் குழந்தை ஓய்வெடுத்த வேளையில் கழுகு ஒன்று அவ்விடத்தில் வந்தமர்கிறது.

கழுகு தன் இறக்கையை விரிக்குமென கார்ட்டர் 20 நிமிடம் காத்திருக்கிறார்.அது விரிக்கவில்லை.
எனவே குழந்தையும் கழுகும் இடம்பெறும் வகையில் இக்கோரக்காட்சியைப்
புகைப்படமாக எடுக்கிறார்.

இதுதான் அந்த புகைப்படம்


இதுதான் அப்பொழுது சூடான் நாட்டில் அயோடு கிராமத்தில் நிகழ்ந்த நிகழ்வு .

குழந்தைக்கு நடந்து செல்லும் அளவுக்கு ஆற்றல் இருந்தது.ஆனால் அவளின் இறுதி முடிவு என்ன என்பது அறியப்படவில்லை -இப்புகைப்படம் முதன்முதலாக வெளியிட்ட  நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் ஆசிரியர்

குழந்தையின் துன்பத்தைப் போக்காமால் அவள் படும் துயரத்தை சரியான கோணத்தில் படமெடுக்கும் பொருட்டு தன் புகைப்படக் கருவியின் லென்சைச் சரி செய்து கொண்டிருந்த கார்ட்டர் இன்னொரு கொலையாளியாகத்
தான் இருக்க முடியும்.
கார்ட்டர் காட்சியின்
இன்னொரு கழுகு -
புளோரிடா செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டைம்ஸ் நாளிதழ்

இந்த விமர்சனமும் இவரது தற்கொலைக்கு காரணம் என சொல்லப்படுவதுண்டு.


எது எப்படியோ இளம்வயதில் மண்ணைவிட்டு மறைந்த
இன்னொரு சாதனையாளன்
கெவின் கார்ட்டர் என்றால்
அது மிகையில்லை.



2 comments:

  1. சிறந்த பதிவு! நன்றி! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. நன்றி நண்பரே..

    ReplyDelete