Sunday 23 October 2016

சாம்சங்கின் அடுத்த நகர்வு சாதிக்குமா அல்லது மீண்டும் சறுக்குமா?


ஒருபக்கம் கேலக்ஸி நோட் 7 வெடிக்கும் சர்ச்சை நீடித்தாலும் மறுபக்கம் அசராது தனது புதிய கேலக்ஸி வகை ஸ்மார்ட்போன்களை மார்க்கெட்டில் விட்டுக்கொண்டே இருக்கிறது சாம்சங் நிறுவனம்.

எவ்வளவு பெரிய பின்னடைவை சந்தித்தாலும் நான் தான் மொபைல் உலகின் ராஜா என்பது போல மீண்டும் மெய்ப்பிக்கும் விதமாக மிக குறுகிய காலத்தில் புதிய மூன்று விதமான மொபைலினை வெளியிட்டுள்ளது.

அதனையும் தாண்டி தன்னுடைய மிகப்பெரிய அடுத்தகட்ட நகர்வாக இந்த விலை உயர்ந்த வசதியுடன் கூடிய கேலக்ஸி நோட் 7 யைப் போன்றே புதிய ஒரு மொபைலினை அதிரடியாக அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம்.

கேலக்ஸி சி9 ப்ரோ என்பது தான் அதன் பெயர்.

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோவில் உள்ள வசதிகள்:
ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0
6 இன்ச் எச்.டி. தொடுதிரை
6 ஜிபி ரேம்
64GB சேமிப்பு கொள்ளளவு
கைரேகை சென்சார்
இரட்டை பிளாஷ் ஆதரவு
16 எம்.பி முன்பக்க கேமிரா
16 எம்.பி பின்பக்க கேமிரா
இரண்டு சிம்கார்டு வசதி
ப்ளூடூத் 4.2
4000 mah பேட்டரி
ஸ்னாப்ட்ராகோன் 652 ப்ரோசெசர்

சீனாவில் நவம்பர் 11 முதல் விற்பனை செய்ய  திட்டமிட்டுள்ளது.ஆனால் இந்தியாவில் எப்பொழுது அறிமுகமாகும் என்பது பற்றி விவரம் ஏதும் சாம்சங் நிறுவனத்தால்
இதுவரை வெளியிடப்படவில்லை.

அநேகமாக இந்திய மதிப்பில் சுமார் 30000 ரூபாயிற்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொபைலாவது வெடிக்காமல் இருந்தால் சரி.

சாம்சங்கின் அடுத்த நகர்வு சர்ச்சையில் சிக்காமல் சாதிக்குமா அல்லது மீண்டும் சறுக்குமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment