Monday 17 October 2016

என் கைபேசி காதல்.....



எனக்கு விவரம் தெரிந்து சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு தான் எனக்கு
கைபேசி அறிமுகம் ஆனது.
எல்லாரையும் போல எனக்கும் ஆசை தான்....எப்படியாவது ஒரு சொந்த கைபேசி வாங்கிவிடலாம் என்று.

அப்பொழுது இணையம் இப்ப இருக்கும் அளவுக்கு மிகப்பிரபலம் இல்லை. ஆகவே, இயல்பாகவே கைபேசி பேசுவதற்கு மட்டுமே பிரபலமாக இருந்த காலம்.

படிக்கும் காலகட்டத்தில்  நிர்மல்,வேடி, சாம் போன்ற நண்பர்களது கைபேசிகள் எனக்கு விளையாட்டு பொம்மை போன்று சும்மா பூந்து தப்பு தப்பா விளையாடுவேன்.

அதுமட்டுமல்லாது என்னை என் குடும்பத்தார் தொடர்பு கொள்ள அவ்வப்போது பயன்படுத்தி கொண்டேன் நண்பர்களது உதவியோடு இரவலாக அவர்களது கைப்பேசிகளை...

தவறுதலாக படங்களை, ரிங்க்டோனை அழித்து விட்டு ஒண்ணும் தெரியாதது போல் திருதிரு என ஒருகாலத்தில் விழித்தவன் தான் நான்.

சரியோ தவறோ அடுத்தவன் பொருளை ஓசியா பயன்படுத்துறதுல அப்புடி ஒரு சந்தோசம்..
சரி இருந்தாலும் எவ்வளவு நாள் தான் அடுத்தவன் பொருளை
பயன்படுத்துறது ?

ஆசை யாரைவிட்டது....
எனக்கும் வந்தது கைபேசி மீது காதல்....

ஆனால் துட்டு ?

நினைத்துக்கூட பார்க்கவில்லை அதுவாக என்னை தேடிவந்தது என் தாயார் மூலமாக...

தொலைதூரத்தில் இருக்கும் அவனிடம் பேச சிரமமா இருக்கு ஆகவே, அவனுக்கு ஒரு கைபேசி வாங்கிகொடுங்க என என் தாயார் வற்புறுத்தலுக்குப்பிறகு என் தகப்பனார் எனக்காக வாங்கித்தந்த முதல் கைபேசி நோக்கியா 1600.
அதன் விலை அன்றைக்கு இந்திய மதிப்பில் சுமார் 3700
ரூபாய்.


மறக்கமுடியுமா....அந்த நாளை..!!!
அன்று அப்படி சந்தோசம்....
புதுசாக ஏதோ சாதிச்சது போன்று.

ஆமா...அப்ப புதுசா ஒருத்தன் கைபேசி வைத்திருந்தாலே அதிசயமா  பார்த்த உலகமாச்சே...பின்ன நமக்கென்ன சொல்லவா வேணும்....

இப்ப இருக்குற வசதிகள் ஒன்னு கூட இல்ல பேசுவதை தவிர்த்து...
ஆனாலும் அடக்கமுடியாத சந்தோசம் அன்று இரவு முழுதும்...
படுக்கையின் பக்கத்தில் வைத்து உறங்குனேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சரி ஆசைப்பட்ட கைபேசி வாங்கியாச்சு எப்புடி பயன்படுத்துறது ?
அதானே தெரியல...
தெரிஞ்சவன்ட கேட்டா நம்ம கௌரவம் என்னாவுறது...
விதி வலியதுனு பழையபடி தப்பு தப்பா பூந்து விளையாட ஆரம்பிச்சேன்.

பலநேரம் தொடர்பை துண்டிக்க தெரியாம கைபேசியை அணைத்துவிடுவதுண்டு.
அப்புறம் ஏன் அணைந்ததுனு ஆராய்ச்சி வேற...

சிலநேரங்களில் தொலைபேசி நிறுவனங்களிடம் பணத்தை விவரம் தெரியாம பறிகொடுத்ததுண்டு (இப்ப நமக்கு தெரிந்தே காசு புடுங்குறானுக என்ன செய்ய )அப்ப புகார் மய்யம் பற்றியும் தெரியாது.

ஒருவழியா அனைத்தையும் முயன்று தவறி கற்றேன்... இப்பொழுதும் அப்படியே...!!!

இன்றும் அந்த கைபேசி என்னிடம் இருக்கிறது.இல்லை உறங்குகிறது...
பலமுறை கைநழுவி கீழே விழுந்திருக்கிறது.....ஆனால் எனக்கு உபத்திரம் ஒருபோதும் கொடுத்ததில்லை....

அவ்வப்போது தூசிதட்டி
அழகு பார்த்து வீட்டு மீண்டும் அணைத்து வைத்துவிடுவதுண்டு.

காலம் செல்ல செல்ல வசதிகள் வந்தன.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதற்கு இணங்க என் மனசு வசதி நிறைந்த கைபேசிக்கு தாவியது..

அன்று நோக்கியாவில் தொடங்கிய என் கைபேசி காதல் இன்று ஸியோமியில் வந்து நிற்கிறது.

No comments:

Post a Comment