Sunday 30 October 2016

பிளிப்கார்ட் வேண்டாமே.....


என்னடா இப்படி சொல்றான்னு நினைக்கிறீங்களா...இது முழுக்க முழுக்க என் அனுபவத்தால் வந்தது.

ஆகவே மற்றவரும் கஷ்டப்படவேண்டாம் என்கிற அடிப்படையில் இந்த சம்பவத்தை நினைவுகூர்கிறேன்.

தீபாவளிக்கு ஒருவாரத்திற்கு முன்னதாக நான் ஒரு புடவை ஆர்டர் செய்திருந்தேன்.அவர்களும் முறைப்படி தகவல் அனுப்பிக்கொண்டிருந்தார்கள் ஒழிய  அவர்கள் டெலிவரி செய்ய ஒத்துக்கொண்ட நாள்களுக்கு பிறகும்
பொருள் என் கைக்கு வந்த பாடில்லை.

சரி தேடி கண்டுபிடித்து நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தை அழைத்தால் தமிழில் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. பின்னர் எப்படி நம் குறையை அவர்களிடம் சொல்லி நிவர்த்தி பெறுவது...?

சரி ஒருவழியாக தொடர்புகொண்டால்,
ஆங்கிலம் தவிர்த்து இந்தி தான் பேசுவதற்க்கான ஒரே இந்திய மொழி.
பார்த்துக்கோங்க மக்களே.... ஆகவே தான் இது "இந்தி"ய நிறுவனம்.

சரி ஆங்கிலத்தில் தொடர்புகொண்டு பேசினால் உங்கள் பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும் என சொல்லிவிட்டு போனை துண்டித்துவிடுகிறார்கள்.

இது மீண்டும் மீண்டும் தொடர்கிறது... குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது....

ஒருவழியாக.................................
சிலநாள் கழித்து ஒருநபர் என் மொபைல் எண்ணுக்கு தொடர்புகொண்டு என் முகவரி சொல்லி நான் தான் ஆர்டர் செய்தேனா என விவரம் கேட்கிறார்....கேட்கிறார்...........
இன்று மதியத்திற்குள் உங்கள் பொருள் உங்களை வந்து சேரும் என உறுதி அளிக்கிறார்.ஆனால் பொருள் வரவில்லை.....

ஆனால் அன்றைய இரவு நீங்கள் ஆர்டர் செய்த பொருளை நீங்கள் ஏற்க மறுத்ததால் உங்கள்  ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டுவிட்டது என குறுஞ்செய்தி வருகிறது.

ஆர்டர் செய்த நான் எதற்கு கேன்சல் செய்ய வேண்டும் இப்படி ஒரு ஷாப்பிங் தளம் பார்த்துக்கொள்ளுங்கள்.

இவையனைத்தும் அவர்கள் டெலிவரி செய்வதாக ஒப்புக்கொண்ட கடைசி நாளில் இருந்து நான்கு நாளாக நடந்த, நான் சந்தித்த மோசமான ஷாப்பிங் அனுபவம்.

இவர்கள் தான் இந்தியாவின் நம்பர் ஒன் ஷாப்பிங் தளமாம்...

சோம்பேறி ஈ கார்ட் கொரியர் வைத்துக்கொண்டு அனைத்து இந்திய நகரங்களுக்கும் வழங்குவதாக பீற்றி கொள்கிறது இந்திய நிறுவனம் எனசொல்லிக்கொண்டு சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பிளிப்கார்ட்( பிளாப்கார்ட்)
நிறுவனம்.

இதற்கு அமேசான் எவ்வளவோ பரவாயில்லை...

ஒரு அமெரிக்க அமேசான்
நிறுவனத்தால் தமிழ்நாட்டின் குக்கிராமம் வரை சிறப்பாக சேவை வழங்க முடிகிறது.நுகர்வோர் மையத்தை எளிதில் தமிழில் தொடர்புகொள்ள முடிகிறது.

பாருங்கள் மக்களே.....
ஆனால் இந்திய நிறுவனத்தால் தமிழில் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தை உருவாக்கவும் முடியல... சிறப்பான சேவையினையும் வழங்க முடியல.....

உடனே வெளிநாட்டிற்கு ஆதரவா பேசுறேன்னு யாரும் நினைக்கவேண்டாம் இது என் அனுபவ பாடம் அவ்வளவுதான்.

ஒரு வெளிநாட்டு நிறுவனத்தால் சிறப்பான சேவையினை நமக்கு வழங்கமுடியும் பொழுது இந்திய நிறுவனங்கள் என பீற்றி கொள்ளும் இவர்களால் ஏன் வழங்கமுடியவில்லை என்பதே என் ஆதங்கம்.

பேர் மட்டும் தான்
இந்தியர்களை வசீகரிக்க 
இந்திய நிறுவனம் என்று....

No comments:

Post a Comment