Sunday 9 October 2016

மன்னிப்பு எனும் மந்திரச்சொல்...


நம் மீது தவறு இருந்தால் பாதிக்கப்பட்டவர் சிறியவரோ, பெரியவரோ, ஒரு போதும் மன்னிப்பு கேட்க மறக்க கூடாது.

அவர்களிடம் மன்னிப்பு கேட்பதால் மானம் போய்விடாது...

அவர்கள் உங்களை மன்னிக்கலாம் அல்லது மன்னிக்காமலும் இருக்கலாம். அது பற்றி ஒருபோதும் நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை.

மன்னிக்கிறவர்,மன்னிப்பு எனக்கு பிடிக்காத வார்த்தை என ஒருபோதும் ஒதுங்கி செல்லக்கூடாது.

மன்னிக்கும் மனப்பாங்கு நிச்சயம் ஒவ்வொருவருக்கும் அவசியமும் கூட என்பதை மறக்க கூடாது.

இப்படித்தான்,
ஒருமுறை பெரியவர் கூட்ட நெரிசலில் அடித்து பிடித்து பஸ் ஏறினார்.ஆனாலும் அவருக்கு சீட் கிடைக்கவில்லை.
கூட்டத்தில் கால்வலியோடு நின்று கொண்டே வந்தார்.ஒருவரும் அவருக்கு சீட் கொடுக்க முன்வரவில்லை.

அப்பொழுது ஒரு பஸ் நிறுத்தம் வந்தது. அப்ப மாணவர்கள் கூட்டமாக சத்தமிட்டு கொண்டு ஏறினர்.

அப்பொழுது ஒரு மாணவர் தவறதுலாக பெரியவர் காலில் மிதித்து விட,அவர் கோபத்தில் திட்டிவிட, அவனோ "மன்னிச்சுடு தாத்தா நா வேணும்னு மிதிக்கல" என சொல்லிச்சிட்டு முன்னே நகர்ந்துட்டான்.பெரியவரோ தன் செயலுக்கு மனுதுக்குள்ளே வருந்தினார்

சிறிது நேரத்தில் கூட்டம் குறைய தொடங்கியது.அப்போது பெரியவரிடம் வசை வாங்கிய மாணவன் அருகில் சீட் காலியானது.
அவனோ ஒரு நொடி கூட தாமதிக்காது,கால்கடுக்க நிற்கும் பெரியவரை அழைத்து அமரச்சொல்ல,அவரோ கண்கலங்கி மறுத்தார்.
வற்புறுத்தி "தாத்தா உட்காரு"
என்று சொல்லிட்டு, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்றுவிட்டான்.

இது போன்ற சம்பவங்கள் நம் அன்றாட வாழ்வில் நடப்பவையே...
இது உங்கள் வாழ்விலும் நடந்திருக்கலாம்.

அவ்வாறு நடந்திருந்தால்...
எத்தனை பேர்
இந்த மன்னிப்பு எனும்
மந்திரச்சொல்லை பயன்படுத்தியுள்ளீர்கள்?

மன்னிப்பு எனும் மந்திரச்சொல்லை இதுவரை
பயன்படுத்தவில்லை என்றால்... ஏன்?
இனிமேயாவது பயன்படுத்துங்கள்.

மன்னிப்பு
கல்மனதை கூட கரைக்கும்
மந்திரச்சொல் என்பதை
மறக்காதீர்......


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment