Sunday 2 October 2016

தேசப்பிதா மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தநாள் இன்று...


1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்
இதே 2 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்ற இடத்தில்  பிறந்தார்.

13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்டார்.

18 வயதில் இங்கிலாந்து சென்ற
காந்தியடிகள் பாரிஸ்டர் எனும் வழக்கறிஞர் கல்வியை படித்தார்.

1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்கா பயணம் ஆனார்.

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வு மற்றும்
ஒரு நாள் இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, வெள்ளையர் இல்லை என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வு ஆகியன இரண்டுமே அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில்
போராட்டத்தில் குதிக்க தூண்டுகோலாய் இருந்தன.

தென் ஆப்ரிக்காவில் கறுப்பின மற்றும் அங்கு குடியேறிய இந்திய மக்கள் படும் இன்னலுக்கும் தீர்வுகாண பல அஹிம்சை முறையிலான போராட்டங்களை முன்னெடுத்தார்.

1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.

1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.

ரவ்லத் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்தும் மற்றும் இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தும் ஒத்துழையாமை இயக்கத்தினை தொடங்கினார்.

ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தியடிகள் இந்திய தேசிய காங்கிரஸின் பெரும் தலைவராக உருவெடுத்தார்.

1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது.அதனை ஏற்க மறுத்த காந்தியடிகள் தண்டி யாத்திரையை தொடங்கினார்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடங்கினார்.

காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட பிரிட்டிஷ் அரசு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி  இந்தியாவிற்கு சுதந்திரத்தை வழங்குவதாக அறிவித்தது.

1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி புது தில்லியில் நாதுராம் கோட்சேவால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் தியாகம் செய்த மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று அவரை சிறிது நேரமாவது நினைவில் கொள்வோமாக....



No comments:

Post a Comment