Tuesday 4 October 2016

மீண்டும் ஒரு வாழப்பாடியார் கிடைப்பாரா....


ஒரு காலத்தில் இதே காவேரி பிரச்சனைக்கு ஆதரவாக அப்போதைய நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டதால், தன் அமைச்சர் பதவியினை துச்சம் என மதித்து தூக்கியெறிந்து அமைச்சரவையில் இருந்து வெளியேறிய
தன்மான தமிழன் தான் மறைந்த வாழப்பாடியார்.

அந்த உணர்வு ஏன் இன்று தமிழக மக்களால் பதவி சுகத்தை அனுபவித்து வரும் தமிழக அரசியல்வாதிகளாகிய உங்களுக்கு இல்லாமல் போனது.

கர்நாடக அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் கட்சிக்கு அப்பாற்பட்ட இன உணர்வு உங்களுக்கு ஒருபோதும் வரவே வராதா ?

எதிர்ப்பினை காட்ட உங்களுக்கு ஒரு அறிக்கை வேண்டாம்.
ஒரு ட்வீட் போதுமே...

அதை நீங்கள் செய்தால் அது
உங்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயலாகிடுமா ?

ஒருமுறை தான் தன் இனத்திற்காக அந்த கட்டுப்பாட்டை மீறுங்களேன்.
முடியவில்லையா...? அந்த கட்சி எதற்கு என்று வெளியே வாருங்களேன்.

மக்கள் உணர்வை புரிந்து கொள்ளாத கட்சி நமக்கு எதற்கு ? நீங்களே சொல்லுங்கள்...

சமாதானம் சொல்ல வேண்டிய மத்திய அரசு இத்தனை நாள் தூங்கிவிட்டு இன்று ஒரு சார்பாக செயல்படும் விதமாக சட்டம் பேசுகிறது.
உச்சநீதிமன்றத்திற்கே வாரியம் அமைக்க சொல்ல உரிமையில்லை என்கிறது.

யாருக்குத்தான் உரிமை இருக்கு இந்த ஆட்சியில் சொல்லுங்கள் பார்ப்போம்..

இன்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர்
சந்திக்க மறுத்த சம்பவம் எங்கேனும் நடந்ததுண்டா ?

பிரதமர் சந்திக்க மறுத்தது தமிழக
நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்ல; தமிழக மக்களையும் மற்றும் அவர்களுடைய ஒட்டுமொத்த
உணர்வுகளையும் என்பதை மறக்கவேண்டாம்.

இந்த நேரத்தில் கட்சிபேதமின்றி அனைத்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் உங்கள் பதவியினை ராஜினாமா செய்வதாக அறிவிருத்திருக்க வேண்டாமா....

காத்திருக்கிறேன்..
மீண்டும் ஒரு சூடு சொரணையுள்ள
தன்மானத்தமிழன் வாழப்பாடியாருக்காக....

கிடைப்பாரா....?

குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment